இந்தியக் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரௌபதி முர்முவுக்கு ஆனந்த் மகேந்திரா வாழ்த்து
இந்தியக் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரௌபதி முர்முவுக்கு ஆனந்த் மகேந்திரா வாழ்த்து கூறியுள்ளார்.
திரௌபதி முர்மு
இந்திய நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக பதவி ஏற்றுள்ளார் திரெளபதி முர்மு. புதிய குடியரசு தலைவராக தேர்வாகியுள்ள முர்முவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா. இந்நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
இந்திய நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக பதவி ஏற்றுள்ள திரெளபதி முர்முவிற்கு அரசியல் முக்கிய தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனந்த் மகிந்திரா வாழ்த்து
இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மகேந்திரா, குடியரசுத் தலைவராக பதவி ஏற்றுள்ள திரெளபதி முர்முவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பதிவில், #MondayMotivation என்று குறிப்பிட்டு, இதற்காக நீங்கள் எங்கும் தேட வேண்டிய அவசியமில்லை. அளவில்லா துணிச்சலுடன், தனது பணியை செய்ய பொறுப்பேற்றுகிறார். அவருக்குள் இருந்த தன்னம்பிக்கையும் தைரியமும், அவரை எல்லா தடைகளையும் கடந்து வாழ்க்கையில் முன்னேற செய்திருக்கிறது. அவருக்கு என் செவ்வணக்கம். நாடு பெருமை கொள்ளும் தருணம் இது என்று பதிவிட்டுள்ளார்.

Look no further for your #MondayMotivation Above all else, she is a person of extraordinary courage and a commitment to serve. Her inner strength has enabled her to withstand all the challenges life has thrown at her. I join in saluting her. A moment of intense pride for India. https://t.co/I2wKB24kph
— anand mahindra (@anandmahindra) July 25, 2022