மாணவர்களுக்கு குட் நியூஸ்... பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

Tamil nadu Anbil Mahesh Poyyamozhi
By Vinothini Jul 16, 2023 04:49 AM GMT
Report

தமிழ்நாட்டில் மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்தள்ளது.

பள்ளிகள்

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை எல்லாம் முடிந்து பள்ளிகள் தொடங்கி நடந்து வருகின்றன. ஏற்கனவே வெயிலின் காரணமாக 2 வாரம் தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது, அதனை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கி வருகிறது.

an-order-from-education-department

மேலும், காலாண்டு பரீட்சைக்காக அதற்கான பாடத்திட்டங்களை முடிப்பதற்காக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த சமயத்தில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அறிவிப்பு

இந்நிலையில், தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களில் ஒரு சிலர் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று மருத்துவ முகாம்களில் தெரிய வந்துள்ளது. இளம் வயதிலேயே சிலருக்கு நீரழிவு நோய்கள் ஏற்பட்டுள்ளன, இதனால் தான் இவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

an-order-from-education-department

அதில் நீரழிவினால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள், பள்ளி மற்றும் தேர்வு நேரங்களில், மருந்து, மாத்திரைகள், பழங்கள், சிற்றுண்டிகள், குடிநீர், உலர் பழங்களை எடுத்து வர அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. குளுக்கோ மீட்டர் போன்ற ரத்த, சர்க்கரை அளவை சோதித்தறியும் உபகரணங்களையும் அனுமதிக்க வேண்டும் என்றும்,

தொடர் குளுக்கோஸ் கண்காணிப்பு மற்றும் இன்சுலின் பம்பு போன்றவற்றை தங்களது உடலில் பொருத்தி பயன்படுத்தி வந்தால் அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. திறன் அலைபேசியைப் பயன்படுத்தி அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டால், தேர்வு நேரங்களில் தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து, குளுக்கோஸ் அளவினைக் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதனை கண்காணிக்க மாவட்ட வாரியாக 38 அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.