சென்னையில் பழைய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து..!
சென்னையில் பழைய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
பழைய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.
இதனிடையே சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள பழைய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இடிந்து விழுந்த கட்டிடத்தில் யாரும் வசிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சம்வம் குறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் கட்டிட இடிபாடுகளை அகற்றி வருகின்றனர்.
3 மாதத்திற்கு முன் 100 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தை இடிக்க முன்பே அனுமதி பெற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து மாநகராட்சி சார்பில் தடுப்பு பலகை அமைக்கப்பட்டிருந்ததால் யாருக்கும் காயம் இல்லை.