விரைவில் கிளாம்பாக்கத்தில்...! முக்கிய அறிவிப்பை சொன்ன அமைச்சர் சேகர் பாபு..!

Tamil nadu DMK Chennai P. K. Sekar Babu
By Karthick Feb 05, 2024 04:10 AM GMT
Report

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது முதல் தொடர்ந்து அது குறித்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதத்தில், சென்னை பேருந்து முனையம் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

an-affordable-restaurant-in-kilambakkam-soon

இதற்கு வரவேற்பை விட எதிர்ப்புகளே அதிகரித்து காணப்படும் சூழலில், தமிழ்நாடு அரசு இந்த சூழலை சிறப்பான முறையில் தான் கையாளுகிறது என்றே கூறலாம்.

பஸ் ஸ்டாண்டால் எகிறிய விலை...!! கிளாம்பாக்கத்தில் ஒரு சதுர அடி எவ்ளோ'னு தெரியுமா..?

பஸ் ஸ்டாண்டால் எகிறிய விலை...!! கிளாம்பாக்கத்தில் ஒரு சதுர அடி எவ்ளோ'னு தெரியுமா..?

சேகர் பாபு அறிவிப்பு

தொடர்ந்து மக்களுக்கான வசதிகளை அதிகரிப்பதிலும், மக்களின் கோரிக்கைகளுக்கும் தொடர்ந்து அரசு முற்பட்டு வருகின்றது. அதன்படி, ஒரு அறிவிப்பை தான் தற்போது தமிழ்நாடு இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த சேகர் பாபு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் என்று கூறினார்.

an-affordable-restaurant-in-kilambakkam-soon

கோயம்பேட்டில் கடை வைத்திருந்த 11 உரிமையாளர்களுக்கு கிளாம்பாக்கத்தில் கடை ஒதுக்க ஏற்பாடு என்ற அவர், முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிலையம் கட்டும் பணி ஏப்ரலில் நிறைவு பெறும் என்றும் தெரிவித்தார்.