அங்கேயுமா.? கடையைப் போட்ட அமுல் - மெகா கூட்டணி!
அமுல் அமெரிக்காவில் பால் விற்பனையைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
அமுல்
அமுல் மூலம் பால், பாலாடைக்கட்டி, தயிர், லஸ்ஸி, சாக்லேட் மற்றும் பிற பால் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியா முழுவதும் அதிக பயன்பாட்டைக் கொண்டுள்ளது.
இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் அமுல் தடம் பதித்துள்ளது. அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை மற்றும் மத்திய மேற்கு சந்தைகளில் புதிய பாலை விற்பனை செய்வதற்காக மிச்சிகன் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் (MMPA) அமுல் நிறுவனம் ஒன்றிணைந்துள்ளது.
அமெரிக்காவில் விற்பனை
இதுகுறித்து அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெயன் மேத்தா, அமுல் பால் பொருட்கள் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்காக 108 ஆண்டுகள் பழமையான அமெரிக்காவின் மிச்சிகன் பால் பொருட்கள் சங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம்.
சமீபத்தில் நடைபெற்ற அமுல் நிறுவனத்தின் வெள்ளி விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, உலகின் மிகப்பெரிய பால்பொருள் தயாரிப்பு நிறுவனமாக அமுல் உருவெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கேற்ப, உலக அளவில் எங்கள் தயாரிப்புகளை கொண்டு போய் சேர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
‘டேஸ்ட் ஆப் இந்தியா’ என அமுல் போற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.