பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு - வாடிக்கையாளர்கள் கலக்கம்!
பிரபல அமுல் நிறுவனத்தில் பால் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பால் விலை உயர்வு
குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு (GCMMF) அமுல் பால் வகைகளை விலை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் அமுலின் அனைத்து வகை பால்களின் விலையை உயர்த்துவதாகத் தெரிவித்துள்ளனர்.
அதன் படி லிட்டருக்கு ரூ.3 அதிகரிக்கப்பட்டுள்ளது. அமுல் தாசா அரை லிட்டர் பால் 27 ரூபாய்க்கும், 1 லிட்டர் பால் ரூ.54 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அமுல் தாசா 2 லிட்டர் மற்றும் 6 லிட்டர், ரூ.108 மற்றும் ரூ.324 ஆக அதிகரித்துள்ளது.
லிட்டருக்கு ரூ.3
அதனைத் தொடர்ந்து, அமுல் கோல் அரை லிட்டர் பால் 33 ரூபாய்க்கும், 1 லிட்டர் 66 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 6 லிட்டர் பால் ரூ.396 ஆக விலை அதிகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
அமுல் பசும் பால் அரை லிட்டர் ரூ28 ஆகவும், 1 லிட்டர் ரூ56 ஆகவும், அமுல் எருமைப் பால் 500 ml ரூ35, 1 லிட்டர் ரூ.70 மற்றும் 6 லிட்டர் ரூ.420 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அதிகரிக்கப்பட்ட விலை அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.