முதலமைச்சரின் அதிரடி - உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் கிடைத்த கூடுதல் பொறுப்புகள்!!
சில தினங்கள் முன்பு தமிழகத்தில் பல ஐஏஎஸ் தங்களது பதவிகளில் மாற்றம் பெற்றார்கள்.
அமுதா ஐஏஎஸ்
தமிழகத்தில் தற்போது பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிகம் பிரபலம் பெற்றவர்களில் ஒருவராக உள்ளார் அமுதா ஐஏஎஸ். அண்மையில் நடைபெற்று பெரும் சலசலப்புகளை உண்டாக்கிய பல்பீர் சிங் விவகாரத்தில் கூட தமிழக அரசு நம்பியது அமுதா ஐஏஎஸ் தான்.
அப்படி இருந்த அமுதா அண்மையில் பதவி மாற்றம் பெற்றார். தமிழகத்தில் பல ஐஏஎஸ் அதிகாரிகள் பதவி மாற்றம் பெற்றார்கள். சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் கூட்டுறவு மற்றும் உணவுத்துறைக்கு மாற்றப்பட்டார்.
கூடுதல்
அதே போல, தமிழகத்தின் உள்துறை செயலராக இருந்த அமுதா ஐஏஎஸ் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக மாற்றப்பட்டார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ்-க்கு கூடுதலாக முதல்வரின் முகவரி திட்டம்,
மக்களுடன் முதல்வர் மற்றும் மக்கள் குறை தீர்க்கும் திட்டங்களுக்கான சிறப்பு அதிகாரிபோன்ற பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளது என தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா அறிக்கை வெளியிட்டுள்ளார்.