ஏதோ உண்மையை மறைக்க என்கவுண்டர்?? சந்தேக கேள்வி எழுப்பும் அண்ணாமலை

Bahujan Samaj Party Tamil nadu BJP K. Annamalai
By Karthick Jul 14, 2024 09:27 AM GMT
Report

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளில் ஒருவரான திருவேங்கடம் இன்று காலை என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்பதிவு வருமாறு,

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர் என்கவுண்டர்!! காலையே சென்னையில் பரபரப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர் என்கவுண்டர்!! காலையே சென்னையில் பரபரப்பு

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொலை வழக்கில் சரணடைந்த திருவேங்கடம் என்பவரை, இன்று தமிழக காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். திருவேங்கடம், தப்பி ஓடும்போது சுட்டுக் கொன்றதாகத் தெரிவித்துள்ளனர்.   

ஏதோ உண்மையை மறைக்க என்கவுண்டர்?? சந்தேக கேள்வி எழுப்பும் அண்ணாமலை | Amstrong Death Case Acquest Encounter Annamalai

கொலை செய்ததாகச் சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார் என்பது பெருத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலையில், திமுகவினர் மூன்று பேர் சம்பந்தப்பட்டிருப்பதனால், ஏதோ ஒரு உண்மையை மறைக்க முயற்சிகள் நடப்பது போலத் தெரிகிறது. திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொலை வழக்கு, சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

ஏதோ உண்மையை மறைக்க என்கவுண்டர்?? சந்தேக கேள்வி எழுப்பும் அண்ணாமலை | Amstrong Death Case Acquest Encounter Annamalai

இந்த திருவேங்கடம் என்பவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை, காவல்துறை உயர் அதிகாரிகள் முறையாக விசாரிக்க வேண்டும் என்றும், திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை தொடர்பான விசாரணை, நியாயமாகவும், துரிதமாகவும் நடக்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன்.