முன்னாள் கணவரை விளாசிய சுசித்ரா - தகாத வார்த்தையுடன் பதிலடி கொடுத்த 2-வது மனைவி!
தனது கணவர் கார்த்திக் குமாருக்கு ஆதரவாக அவரது இரண்டாவது மனைவி அம்ருதா ஸ்ரீனிவாசன் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
பாடகி சுசித்ரா
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வளம் வந்தவர் சுசித்ரா. இவர் தனது தனித்துவமான குரலால் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.
சுசித்ரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ‛சுச்சி லீக்ஸ்' விவகாரத்தில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து சுசித்ராவின் கணவரும், நடிகருமான கார்த்திக் குமார் அவரை விவாகரத்து செய்தார்.
பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு நடிகை அம்ருதா ஸ்ரீனிவாசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சுசித்ரா அளித்த பேட்டி ஒன்று தமிழ் சினிமா வட்டாரத்தில் மீண்டும் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில், பல பிரபலங்களை குறித்து தாறுமாறாக அவர் விமர்சித்துள்ளார்.
கணவருக்கு ஆதரவு
மேலும், தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஓரினச்சேர்க்கையாளர் என்று கூறி அதிரவைத்தார். இதற்கு பதிலளித்த கார்த்திக் குமார் "ஒருவேளை நான் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தால் அதை வெளியில் சொல்ல தயங்க மாட்டேன்.
அதை மறைத்து வைத்து மற்றவர்களை கஷ்டப்படுத்த மாட்டேன். நான் அப்படிப்பட்டவன் என்றால் அதை வெளிப்படையாக சொல்வேன். அதற்காக நான் அசிங்கப்பட மாட்டேன்'' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனது கணவர் கார்த்திக் குமாருக்கு ஆதரவாக அவரது இரண்டாவது மனைவி அம்ருதா ஸ்ரீனிவாசன் ஆபாச வார்த்தையுடன் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் "வாழ்க்கை என்பது சிறியது. இதில், தேவையில்லாமல் விவாதம் செய்யாமல் டேஷா போச்சுன்னு நகர்ந்து வந்துடு கார்த்திக் குமார்" என கேப்ஷன் கொடுத்துள்ளார்.