மருமகள் ஐஸ்வர்யா ராயை இன்ஸ்டாவில் அன்ஃபாலோ செய்த அமிதாப்? பிரிவு உறுதி!

Aishwarya Rai Amitabh Bachchan
By Sumathi Dec 10, 2023 10:46 AM GMT
Report

அமிதாப் பச்சன் ஐஸ்வர்யாராயை அன்ஃபாலோ செய்ததாகக் கூறப்படுகிறது.

அமிதாப் பச்சன்

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007ம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.

amitabh-bachchan

இந்நிலையில் அபிஷேக் பச்சன் அண்மையில் சமூக வலைதளத்தில் வெளியிட்ட புகைப்படங்களில் அவர் கையில் திருமண மோதிரம் இல்லை. இந்த புகைப்படம் வைரலாகியது.

aishwarya rai family

வைரல் பதிவு 

இதனைப் பார்த்த ரசிகர்கள் இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிகின்றனரா என கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது, 16 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த இவர்களது விவாகரத்து வதந்தி தான் ஹாட் டாப்பிக்காக உள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக குடும்பத்துடன் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட ஃபோட்டோஸ் வைரலாகி வருகிறது. ஆனால், இந்த நிகழ்ச்சிக்குப் பின் அமிதாப் பச்சன் இன்ஸ்டாகிராமில் மருமகள் ஐஸ்வர்யா ராயை அன்ஃபாலோ செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் விவாகரத்து; முற்றுப்புள்ளி வைத்த புகைப்படம்!

ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் விவாகரத்து; முற்றுப்புள்ளி வைத்த புகைப்படம்!

மேலும், தனது எக்ஸ் தளத்தில் “எல்லாமே சொல்லியாச்சு, எல்லாமே நடந்துடுச்சு.. ” எனும் கேப்ஷனுடன் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் அமிதாப் பச்சன் நடிகர் சல்மான் கான், மகன் அபிஷேக், மகள் ஸ்வேதா, நடிகை அலியா பட், விராட் கோலி உள்ளிட்ட 74 நபர்களை மட்டுமே தற்போது ஃபாலோ செய்து வருவது குறிப்பிடத்தக்கது.