காவ்யா மாறனின் கண்ணீர் !! பரவாயில்ல மை டியர் - உருகிப்போன அமிதாப் பச்சன்
தோல்வியை தாங்கி கொள்ள முடியாமல் காவ்யா மாறன், மைதானத்தில் கண்ணீர் சிந்திய வீடியோ இன்னும் வைரலாகி வருகின்றது.
காவ்யா மாறன்
சன்ரைசர்ஸ் அணியின் CEO காவ்யா மாறன், ஐபிஎல் போட்டிகளின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்துள்ளார். போட்டியில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் அவர், தனது reaction'களுக்கும் பிரபலமே.
இறுதி போட்டிக்கு அதிரடியாக விளையாடி முன்னேறிய சன்ரைசர்ஸ் அணி, பேட்டிங்கில் அசுர பலத்துடன் இருந்தது. ஆனால், இறுதி போட்டியில், வெறும் 113 ரன்களே அந்த அணியால் எடுக்க முடிந்தது.
இதனால், மைதானத்தில் சோர்வாக அமர்ந்திருந்த காவ்யா மாறன், அணியின் தோல்வி உறுதியானதை அடுத்து மைதானத்தில் இருந்து கண்ணீர் விட்ட படியே வெளியேறினார்.
அமிதாப் பச்சன்
அவருக்கு பலரும் சமூகவலைத்தளங்களில் ஆறுதல் தெரிவித்தனர். அப்பட்டியலில் பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது blog'கில் ஐபிஎல் இறுதிப் போட்டி முடிந்துவிட்டது, KKR மிகவும் உறுதியான வெற்றியைப் பெற்றுள்ளது.
ஆனால் மனதை மிகவும் தொட்டது என்னவென்றால், .. SRH இன் உரிமையாளர், ஸ்டேடியத்தில், தோல்விக்குப் பிறகு உணர்ச்சிவசப்பட்டு, கண்ணீரில் மூழ்கி, கேமராக்களிலிருந்து முகத்தைத் திருப்பி, தன் உணர்ச்சியைக் காட்டவில்லை. . பரவாயில்லை.. நாளை இன்னொரு நாள்.. என் கண்ணே! என எழுதியிருந்தார்.