அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து தடுமாற்றம் - பதைபதைக்கும் வீடியோ!
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமித் ஷா
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. அதில் முதற்கட்டம் 102 தொகுதிகளில் நடந்தது முடிந்தது. இரண்டாம் கட்டமாக 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
இதற்கிடையில் அணைத்தது அரசியல் கட்சிகளும் முக்கிய தலைவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பீகாரில் உள்ள பெருய்சராய் பகுதியில் இன்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.அப்போது அவர் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.
ஹெலிகாப்டர்
இதனை தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலம் அவர் கிளம்புவதற்காக அருகில் உள்ள ஹெலிபேடிற்கு வந்திருந்தார். அங்கு தயாராக இருந்த ஹெலிகாப்டரில் அவர் ஏறி அமர்ந்ததும் ஹெலிகாப்டர் விமானி புறப்பட ஏற்பாடு செய்து கொண்டு இருந்தார்.
ஹெலிகாப்டர் வானில் எழும்ப முயற்சித்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்குமிங்கும் இலக்கின்றி பறக்கத் தொடங்கியது. சில நொடிகள் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறிய ஹெலிகாப்டரை விமானி மெல்ல தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
அதிர்ஷ்ட வசமாக அசம்பாவிதமாக எதுவும் நடக்காமல் அமித் ஷா தனது பயணத்தை தொடர்ந்தார்.நல்லபடியாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என சொல்லப்படுகிறது. இருப்பினும் மத்திய உள்துறை அமைச்சர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இந்த காட்சிகள் கொண்ட வீடியோ இணையத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.