காங்கிரஸ் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான கட்சி - அமித்ஷா பேச்சு!

Amit Shah BJP India Haryana
By Jiyath Jul 16, 2024 02:25 PM GMT
Report

காங்கிரஸ் கட்சி எப்போதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான கட்சியாகவே உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அமித்ஷா

அரியானா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தின் மகேந்திரகார் நகரில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மாநாடு நடைபெற்றது.

காங்கிரஸ் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான கட்சி - அமித்ஷா பேச்சு! | Amit Shah Speech About Congress Party

இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது "காங்கிரஸ் கட்சி எப்போதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான கட்சியாகவே உள்ளது என்று கூறினார்.

அவருடைய பேச்சின்போது, 1950-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட காகா கலேகர் ஆணையம் பற்றி குறிப்பிட்டு பேசினார். ஓ.பி.சி.க்கு (இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு) இடஒதுக்கீடு வழங்குவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் இந்த ஆணையம் உருவாக்கப்பட்டது.

நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கிய விக்கிரவாண்டி - மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கிய விக்கிரவாண்டி - மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

அனுமதிக்கமாட்டோம் 

எனினும், காங்கிரஸ் கட்சி இந்த பரிந்துரைகளை பல ஆண்டுகளாக அமல்படுத்தவில்லை. 1980-ம் ஆண்டில் இந்திரா காந்தி (அப்போது பிரதமராக இருந்தவர்), மண்டல் கமிஷனை கிடப்பில் போட்டு விட்டார்.

காங்கிரஸ் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான கட்சி - அமித்ஷா பேச்சு! | Amit Shah Speech About Congress Party

1990-ம் ஆண்டில் அது ஏற்று கொள்ளப்பட்டபோது, ராஜீவ் காந்தி இரண்டரை மணிநேரம் வரை உரையாற்றி விட்டு, ஓ.பி.சி. இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டார். கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை பறித்த காங்கிரஸ் கட்சி, முஸ்லிம்களிடம் அதனை கொடுத்து விட்டது.

அரியானாவில் அவர்கள் வெற்றி பெற்றால் அதேமுறையை செயல்படுத்துவார்கள். அரியானாவில் முஸ்லிம் இடஒதுக்கீட்டை நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று உங்களுக்கு நான் உறுதி கூற விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.