ஜூன் 25 அரசியலமைப்பு படுகொலை தினம் அனுசரிக்கப்படும் !! அமித் ஷா திட்டவட்டம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25-ஆம் தேதி அரசியலமைப்பு படுகொலை தினமாக கொண்டாடப்படும் என அறிவித்திருக்கிறார்.
எமர்ஜென்சி
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 1971-ஆம் ஆண்டு ரைபரேலி வெற்றியை அலகாபாத் நீதிமன்றம் செல்லாது என தீர்பளித்ததன் வெளிப்பாடு இன்றளவும் இந்திய அரசியலில் எதிரொலித்து வருகின்றது.
அவரை பிரதமராக இருக்க கூடாது என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பிய நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில், அப்போது நாடாளுமன்ற வாக்கெடுப்புகளில் இந்திரா காந்தி கலந்து கொள்ள கூடாது என தெரிவித்து ஆனால், இந்திரா காந்தி பிரதமராக தொடரலாம் என தெரிவித்தார்.
அறிவிப்பு
இதனை தொடர்ந்து நாட்டின் அதிகாரமிக்க இடத்தில் இருந்த இந்திரா காந்தி, எமர்ஜென்சியை நாட்டில் நடைமுறைக்கு கொண்டு வந்தார். 1975 ஆம் ஆண்டு துவங்கிய இந்த எமர்ஜென்சி 21 மாதங்கள் நீடித்தது.
1977 ஆம் ஆண்டு மார்ச் வரை எமர்ஜென்சி நீடித்தது. அதனை விமர்சித்து தற்போது இந்திய அரசியலில் சலசலப்புகளை உண்டாகுகிறது. நாட்டின் 18-வது மக்களவை கூட்டத்தொடர் கூடியதில் முதல் நாளிலேயே பிரதமர் மோடி இது குறித்து பேசினார்.
கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் தான், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேலும் ஒரு விஷயத்தை செய்துள்ளார்.
அதாவது, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25ம் தேதி அரசியலமைப்பு படுகொலை தினமாக அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார். இது கடுமையான வாதங்களை பெற்றுள்ளது.