அந்தமான் தலைநகர் பெயரை மாற்றிய மத்திய அரசு - என்ன பெயர் தெரியுமா?
அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயர் பெயர் மாற்றப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அந்தமான் தலைநகர்
இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களின் பெயர்கள் அண்மைக்காலமாக மத்திய அரசு மாற்றி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது அந்தமானின் தலைநகரான போர்ட் பிளேயரை ஸ்ரீ விஜயபுரம் என மாற்றப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ,'' வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை மதிக்கும் வகையில் அரசாங்கத்தின் இந்த பெயர் மாற்றம் முடிவு இருப்பதாக அமித்ஷா கூறியுள்ளார்.
காலனி முத்திரையிலிருந்து நாட்டை விடுவிப்பதற்காக போர்ட் பிளேயர் என்ற பெயரை ஸ்ரீ விஜயபுரம் என்று மறுபெயரிட முடிவு செய்துள்ளோம்.
முந்தைய பெயர் காலனித்துவ மரபைக் கொண்டிருந்தாலும், ஸ்ரீ விஜய புரம் நமது சுதந்திரப் போராட்டத்தில் அடைந்த வெற்றியையும், அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தனித்துவமான பங்கையும் குறிக்கிறது.
அமித்ஷா
நமது சுதந்திரப் போராட்டத்திலும் சரித்திரத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இணையற்ற இடம் உண்டு. ஒரு காலத்தில் சோழப் பேரரசின் கடற்படைத் தளமாக விளங்கிய தீவுப் பகுதி இன்று நமது வளர்ச்சிக்கு முக்கியமான தளமாக விளங்குகிறது.
மேலும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், வீர சாவர்க்கார் உள்ளிட்ட சுதந்தர போராளிகள் அந்தமான் சிறையில் தான் அடைக்கப்பட்டனர் என்று பதிவிட்டுள்ளார்.