அக்னிபாத் திட்டத்தில் அதிரடி மாற்றம் - விரைவில் மத்திய அரசு ஆலோசனை!
அக்னிபாத் திட்டத்தின் விதிகளில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அக்னிபாத் திட்டம்
இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் குறுகிய கால மற்றும் நிரந்தர அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். குறுகிய கால அடிப்படையில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் 10 ஆண்டுகளும், நிரந்தர அடிப்படையில் தேர்வு செய்யப்படுவோர் ஓய்வு பெறும் வயது வரையிலும் பணிபுரிய முடியும்.
இதில் குறுகிய கால அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் விருப்பப்பட்டால் தனது பணிக்கால முடிவில் 4 ஆண்டுகள் பணி நீட்டிப்பு பெற்றுக் கொள்ளலாம். இதுவே இந்திய ராணுவத்தில் தற்போது வரை பின்பற்றப்படும் நடைமுறையாக இருந்தது.
ராணுவத்தில் அதிக அளவில் இளைஞர்களை சேர்க்கும் வகையிலும், வேலைவாய்ப்பை பெருக்கும் விதமாகவும் 'அக்னிபாத்' என்ற திட்டத்தை மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்தது. இந்த திட்டம் தற்போது செயல்பாட்டுக்கு வருகிறது.
திட்டத்தில் தேர்வாகும் வீரர்களுக்கு முதலாம் ஆண்டு ரூ.4.76 லட்சம் ஊதியமும், 4-வது ஆண்டில் ரூ.6.92 லட்சம் சம்பளமும் வழங்கப்படும். பணி நிறைவின் போது ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா ரூ. 11.7 லட்சம் வழங்கப்படும். இந்த நிலையில், அக்னிபாத் திட்டத்தின் நடைமுறை விதிகளில் மாற்றம் கொண்டு வருவது குறித்து
மத்திய அரசு
ஆலோசனை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படுபவர்கள் 5 முதல் 80 சதவிகிதம் பேர் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ராணுவத்தில் பணியாற்ற இயலாது. இந்த நடைமுறையை மாற்றி 60 முதல் 70 சதவிகித வீரர்களை ராணுவத்தில் தக்க வைத்துக் கொள்ளலாம் என்கிற மாற்றத்தை
கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.இதனிடையே, அக்னிபாத் திட்டத்தில் தொழில்நுட்ப பிரிவு வீரர்களின் ஓய்வு வயதை 21ல் இருந்து 23 ஆக உயர்த்தவும், பணி காலத்தை 7 முதல் 8 ஆண்டுகளாக உயர்த்தவும் இந்திய ராணுவம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போரின் போது உயிரிழக்கும் அக்னி வீரர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கவும் பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.இது தொடர்பாக பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் வரும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள ஆலோசனைக்கு பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்