நள்ளிரவில் அமித் ஷா போட்ட உத்தரவு: பேரதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி

dmk bjp congress aiadmk
By Jon Mar 03, 2021 02:45 PM GMT
Report

தமிழகம் வந்த அமித் ஷா, அதிமுக கூட்டணிக்குள் சசிகலா மற்றும் தினகரனை கொண்டு வரும் படி அமித் ஷா உத்தரவிட்டுள்ளதால், எடப்பாடியார் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் உள்ளாராம். தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், நள்ளிரவில் அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையில், எடப்பாடி , ஒபிஎஸ் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் தொகுதிகள் எத்தனை என்பதை உறுதி செய்ய அமித்ஷா முன் வருவார் என்று எதிர்பார்த்த எடப்பாடியாருக்கு அமித்ஷாவின் எச்சரிக்கை அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நம் கட்சிகளினிடையே உடன்பாட்டை எட்டுவதற்குள் சசிகலா, தினகரனை கூட்டணிக்குள் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்துங்கள்.

தேர்தல் முடிவுகள் குறித்து எங்களுக்கு வருகின்ற உளவுத்துறைகளின் ரகசிய அறிக்கைகள் திருப்த்தி அளிக்கவில்லை. சசிகலா , தினகரன் கூட்டணிக்குள் வராமல் தேர்தலை சந்திப்பதை ஏற்க முடியாது என கோபமாக அமித்ஷா பேசி உள்ளார். சசிகலாவை கட்சிக்குள் கொண்டு வருவதை தவிர்ப்பதற்கான காரணங்களை முன்வைக்க எடப்பாடி முயன்ற போது அதை அமித்ஷா ஏற்கவில்லை.

ஓபிஸ் மவுனமாக புன்னகையுடன் ஆமோதித்துள்ளார். பாஜகவின் நகர்வுகள் எடப்பாடியை கடுமையக யோசிக்க வைத்துள்ளது. மேலும், சசிகலா , தினகரனை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வரும் பணிகள் தொடங்கி விட்டதாக பாரதிய ஜனதாவின் டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.