ஜெய் ஷாவிடம் பயிற்சியாளர் பதிவிற்கு விண்ணப்பித்த அமித் ஷா - அதிர்ந்த BCCI
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மோடி, அமித்ஷா, தோனி ஆகியோர் பெயரில் போலியான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
பயிற்சியாளர்
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதய பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வரும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது.
இதனையடுத்து அடுத்த பயிற்சியாளருக்கான தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியது பிசிசிஐ. கூகிள் ஃபார்ம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படும் என பிசிசிஐ அறிவித்தகது.
கவுதம் காம்பீர் இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் அடிபட்டது. ஆனால் தற்பொழுது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ளார். கொல்கத்தா அணி தற்பொழுதுகோப்பையை வென்றுள்ளதால் இவரை தக்க வைக்கவே அணி உரிமையாளர் ஷாருக்கான் ஆர்வம் காட்டி வருகிறார்.
அமித் ஷா விண்ணப்பம்
நேற்றுடன் (27.05.2024) இப்பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி முடிவடைந்துள்ள நிலையில் , 3000 விண்ணப்பங்கள் வந்துள்ளது.
இதில் அரசியல்வாதிகளான இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி, வீரேந்திர சேவாக், ஹர்பஜன் ஆகியோர் பெயரிலும் போலியான விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.