என்.டி.ஏவில் இணையும் விஜய்? முதல்வர் வேட்பாளர் யார் - அமித் ஷா திட்டவட்டம்

Vijay Amit Shah ADMK Thamizhaga Vetri Kazhagam
By Sumathi Jun 27, 2025 04:45 AM GMT
Report

என்.டி.ஏ கூட்டணியில் விஜய் இணைவாரா? என்ற கேள்விக்கு அமித்ஷா பதில் அளித்துள்ளார்.

என்.டி.ஏ கூட்டணி

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்துள்ள பேட்டி ஒன்றில் தேசிய ஜனநாயக கூட்டணியில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் இணையுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

vijay - amit shah

அதற்கு, “தேர்தலுக்கு இன்னும் போதுமான கால அவகாசம் இருக்கிறது. எனவே இன்னும் சில காலம் காத்திருங்கள்; அனைத்தும் தெளிவாகிவிம் என்றார்.

2 பைசா ரயில் கட்டண உயர்வுக்கு நீலிக்கண்ணீரா - ஸ்டாலினை சாடிய அண்ணாமலை

2 பைசா ரயில் கட்டண உயர்வுக்கு நீலிக்கண்ணீரா - ஸ்டாலினை சாடிய அண்ணாமலை

அமித் ஷா திட்டவட்டம்

தொடர்ந்து பேசிய அவர், “2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி அமையும். எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் அரசு அமைக்கும்.

என்.டி.ஏவில் இணையும் விஜய்? முதல்வர் வேட்பாளர் யார் - அமித் ஷா திட்டவட்டம் | Amit Shah About Vijay Alliance Nda Bjp

அதில் பாஜக -வின் பங்கு இருக்கும். தேர்த்லில் நாங்கள் அதிமுக தலைமையின் கீழ் போட்டியிருகிறோம். முதல் அமைச்சர் அதிமுகவில் இருந்து வருவார்.

அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் யாரையும் நான் ஒன்றிணைக்கவில்லை. அது அவர்கள் கட்சி குறித்த விஷயம். அவர்கள் தாங்களாகவே முடிவு எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.