டேட்டிங் செல்ல ரூ.300 வேண்டும்..ரூ.500 அனுப்பிய அமித் மிஸ்ரா! ரசிகர்கள் நெகிழ்ச்சி
டேட்டிங் செல்ல 300 ரூபாய் கேட்ட ரசிகருக்கு 500 ரூபாய் அமித் மிஸ்ரா வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமித் மிஸ்ரா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா. இந்தியாவுக்காக 22 டெஸ்ட், 36 ஒருநாள் போட்டிகள் மற்றும் 8 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்கள் எடுத்தோரின் பட்டியலில் இவரது பெயரும் உண்டு. தற்போது சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். இந்நிலையில், சுரேஷ் ரெய்னா ஃபீல்டிங் செய்யும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்தார் மிஸ்ரா.
நெகிழ்ச்சி சம்பவம்
அதற்கு வந்த கமன்ட் தான் இப்போது இணையத்தைக் கலக்கி வருகிறது. அந்த வீடியோவின் கமன்ட் செக்ஷனில் தோனியின் ரசிகர் ஒருவர் "என் காதலியுடன் வெளியில் செல்ல 300 ரூபாய் வேண்டும்" என்று கேட்டிருந்தார்.
Bhai @imraina, can I borrow your Time Machine? It’s mesmerising to see you field like old times. ?? https://t.co/5YIvJAKELW
— Amit Mishra (@MishiAmit) September 29, 2022
அதற்கு மற்றொருவர் யுபிஐ ஐடியை பகிருமாரு கேட்க, அவரும் பகிர்ந்திருந்தார்.
பின்னர் அமித் மிஸ்ரா அந்த யுபிஐ ஐடிக்கு 500 ரூபாய் செலுத்தியதாக ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்தார். இது ட்விட்டர் வாசிகளை நெகிழச் செய்தது.