நீ யார் கோலியை ரிட்டையர் ஆகச்சொல்ல? ஷாகித் அப்ரீடியை விளாசும் ரசிகர்கள்
விராட் கோலி தன் உச்சத்திலேயே ரிட்டையர் ஆவது நல்லது என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரீடியின் கருத்துக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.
விராட் கோலி
ஆசிய கோப்பை ஆப்கானிஸ்தான் பவுலிங்கில் தன் 71வது சதத்தை எடுத்தார் விராட் கோலி. இதனால் அவரது ரசிகர்கள் நாயகன் மீண்டும் வரான் என அவரை கொண்டாடி தீர்த்தனர். இந்நிலையில், ஷாகித் அப்ரீடி, கோலி ஓய்வு பெறுவது நல்லது என்று கூறி சர்ச்சையை கிளப்பினார்.
இதற்கு கோலியின் ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், இந்திய லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா, “டியர் அஃப்ரீடி சிலர் ஒருமுறைதான் ஓய்வு பெறுவார்கள், இந்த விவகாரங்ளிலிருந்து கோலியை விட்டு விடுங்கள்” என்று ட்வீட் செய்துள்ளார்.
அமித் மிஸ்ரா ட்வீட்
ஆனால் ஷாஹித் அப்ரீடி அத்தனை கொடூரமாகச் சொல்லவில்லை, பேர் கெட்டுப் போய் சொதப்பலாகி போகக் கூடாது என்று கோலியின் மீதான அபரிமிதமான மரியாதையில்தான் அப்ரீடி சொல்லியிருக்கிறார்.
Dear Afridi, some people retire only once so please spare Virat Kohli from all this. ?? https://t.co/PHlH1PJh2r
— Amit Mishra (@MishiAmit) September 13, 2022
அவர் கூறிய தொனி இதுதான், “விராட் கோலி விளையாடிய விதம், முதலில் கொஞ்சம் கஷ்டப்பட்டார், பிறகு தனக்கென ஒரு பெயரை உருவாக்கிக் கொண்டார். கோலி ஒரு சாம்பியன். ஆனால் ஒரு கட்டத்தில் ஓய்வு நோக்கி செல்கிறோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
எனவே அவர் தன் உச்சத்தில் ரிட்டையர் ஆவதுதான் நல்லது. கோலி 24,000 ரன்கள் என்ற உச்சத்தில் இருக்கும் போதே ரிட்டையர் ஆவது நல்லது என்று அப்ரீடி கூறியது கோலியின் மேல் இருக்கும் மரியாதையினாலேயே” என தெரிவித்துள்ளார்.