திருமணம் செய்யப்போகும் விஜய் டிவியின் பிரபல ஜோடி - சுடச்சுட தகவல்
பாவனி மற்றும் அமீர் விரைவில் திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமீர்-பாவனி
பாவனி ஹைதராபாத்தை சேர்ந்தவர். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அந்த கணவர் குறுகிய காலத்திலேயே தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். பின்னர் தனியாக இருந்த பாவனிக்கு சின்னத்தம்பி என்னும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த சீரியல் மூலமாக அவர் மிகப் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமீர் தனது காதலைக் கூறிய நிலையில், பாவனி தனது காதலை தெரிவிக்காமல் இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து “பிபி ஜோடிகள்” சீசன் 2 நிகழ்ச்சியில் இருவரும் நடன ஜோடியாக பங்கேற்றி அதில் டைட்டிலை தட்டிச் சென்றனர்.
திருமணம்?
தொடர்ந்து அமீரின் காதலை ஏற்றார் பாவனி. ரசிகர்கள் பலரும் இந்த ஜோடிக்கு எப்பொழுது திருமணம் என்று கேட்ட வண்ணம் உள்ளனர். மேலும் இந்த கேள்வியை இன்ஸ்டாவில் அமீர் நடத்திய கேள்வி பதில் செக்ஷனில் கேட்டனர்.
அதற்கு அமீர் கூடிய விரைவில் எங்களின் திருமணம் நடக்கும் என பதில் அளித்துள்ளார். ஆனால், அவர்களின் திருமணம் எந்த மாதத்தில் நடக்கும் போன்ற விவரங்கள் இன்னும் வெளியாகிவில்லை.