தன் காதலை வெளிப்படுத்திய அமீர் - கண்கலங்கி நின்ற பாவனி - காதலை ஏற்றுக்கொண்டாரா? - வைரலாகும் புகைப்படம்
காதலை வெளிப்படுத்திய அமீர்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர்கள் பாவனி, அமீர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தற்போது, பிக்பாஸ் ஜோடி என்ற நடன நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக நடனமாடி வருகின்றனர்.
இந்நிலையில், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர், பாவனிக்கு காதல் பரிசுகளை கொடுத்து கண்கலங்க வைத்திருக்கிறார். இது குறித்த புரோமோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதன் இறுதியில் அமீர் மோதிரம் ஒன்றையும் கொடுக்கிறார்.
ஆனால் அதனை பாவனி வாங்காமல் தயங்கி நிற்பது போன்ற காட்சிகளும் அந்த புரோமோவில் இடம்பெற்றிருக்கின்றன. இந்த புரொமோவைப் பார்த்த ரசிகர்கள் பாவனி தயங்காம வாங்கிடுங்க... அமீர் ரொம்ப நல்ல பையன்... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் போட்டோ
தற்போது பாவனி கையில் மோதிரத்துடன் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோவை அமீர் வெளியிட்டிருக்கிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஓஹோ... அப்போ உங்க லவ் சக்சஸ்... என்று மகிழ்ச்சியில் வாழ்த்து கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.