பவானிக்கு லவ் லெட்டர் கொடுத்த அமீர் - காதலர்களா? நண்பர்களா? நெட்டிசன்கள் குழப்பம்..!

Thahir
in பிரபலங்கள்Report this article
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 5 மூலம் மிகவும் பிரபலமானவர்கள்.
பவானி ரெட்டைவால் குருவி,பாசமல் போன்ற சீரியல் தொடர்களில் நடித்துள்ளார். இவர் சின்னதம்பி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர்.சீரியல் தொடர்கள் மட்டுமல்லாது சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இவர் தெலுங்கு சீரியல் நடிகர் பிரதீப் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால், பிரதீப் எதிர்பாராத விதத்தில் தற்கொலை செய்து கொண்டது இவரை பெரிதும் பாதித்தது.
இதையடுத்து அந்த துயரச் சம்பவத்தில் இருந்து மீண்டுவந்த பவானி பிக்பாஸ் சீசன் 5-ல் பங்கேற்றார். சகபோட்டியாளரான அமீரை அவர் காதலிப்பதாக தகவல் வெளியானது.
நிகழ்ச்சியின் போதே காதல் பேச்சுக்கள் அதிகம் வெளியான நிலையில், தற்போது இருவரும் ஜோடியாக வெளியே செல்வது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது என இருந்து வருகின்றனர்.
பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2-ல் போட்டியில் மேடையில் அனைவரது முன்பும் பாவானிக்கு ஐலவ்யூ என அமீர் கூறிய வீடியோ செம வைரல் ஆனது .
அதனைத் தொடர்ந்து, அதே நிகழ்ச்சியில் கேள்விக்கு பதிலளிக்கும் டாஸ்க்கில், “எனக்கு அமீர் பிடிக்கும், ஆனால் கொஞ்சம் டைம் வேணும்” என கூறியது வைரல் ஆனது.
இந்நிலையில், அமீர் பாவனியிடம் லவ் லெட்டர் ஒன்றை கொடுத்திருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.