ஆணும் பெண்ணும் சமமே - மேலாடையின்றி போராட்டம் செய்யும் இளம் பெண்!!
ஆண்களும் பெண்களும் சமம் என்பதை வலியுறுத்தியும் வகையில் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் அமெரிக்கா பெண் ஒருவர்.
பெண்ணின் போராட்டம்
பாலின வேறுபாடுகளை கலையவேண்டும் என தொடர்ந்து பல நாடுகளிலும் கோரிக்கைகளை வைக்கப்பட்டு வருகின்றன. சமஉரிமை, சம ஊதியம், சமமதிப்பு போன்றவற்றை வலியுறுத்தும் தீவிர போராட்டக்காரர்கள் தொடர்ந்து பல போராட்டங்களை கையில் எடுத்து வருகிறார்கள்.
அப்படி தான் அமெரிக்கா நாட்டை சேர்ந்த ஐலா ஆடம்ஸ் என்ற பெண் ஒருவர் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார். அவர் போராட்டத்தின் சாராம்சம் ஆண் பெண் சமம்.
பொதுவெளியில் ஆண்கள் மேலாடையின்றி எவ்வாறு எளிதாக நடமாடுகிறார்களோ, அதே போல பெண்களும் செல்லலாமே என கூறி பல விதமான போராட்டத்தை அவர் கையில் எடுத்துள்ளார்.
பார்க்காதீர்கள்
நகரின் பல இடங்களுக்கு செல்லும் அவர், மேலாடையின்றி புகைப்படங்களை எடுத்து அதனை தனது சமூகவலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஐலா ஆடம்ஸ்.
இது தொடர்பாக அவரிடம் பேசிய போது, பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள். நான் செய்வதை பெரும்பாலானோர் கவனிப்பதில்லை. 30 ஆண்டுகளாக நியூயார்க்கில் பெண்கள் மேலாடையின்றி செல்வது சட்டப்பூர்வமாக உள்ளது என்றார்.