மின்னல் தாக்கி உயிர்பிழைத்த பெண்; கிடைத்த மாபெரும் சக்தி - ஆச்சர்ய சம்பவம்!

United States of America
By Sumathi Jun 19, 2023 09:42 AM GMT
Report

மின்னல் தாக்கி உயர்பிழைத்த பெண், புயலை முன்கூட்டியே அறியமுடிவதாக கூறியுள்ளார்.

மின்னல் தாக்கம்

அமெரிக்காவைச் சேர்ந்தவர் கிம்பர்லி க்ரோன். இவருக்கு 6 குழந்தைகள் உள்ளனர். இந்தப் பெண்ணிற்கு ஜூன் 2009-இல் தனது வீட்டிற்குள் சமையல் வேலை செய்து கொண்டிருந்த போது, மின்னல் தாக்கியுள்ளது.

மின்னல் தாக்கி உயிர்பிழைத்த பெண்; கிடைத்த மாபெரும் சக்தி - ஆச்சர்ய சம்பவம்! | American Woman Survived Lightning Strike

அதனால், அவருக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சமையலறையின் கூரையில் இருந்த ஒரு விளக்கின் வழியாக ஊடுருவி, க்ரோன் சமைக்க வைத்திருந்த ஒரு வாணலியின் மீது தாக்கி அதை தூக்கி எரிந்தது. அதன் பிறகு, அதிலிருந்து வெளிப்பட்ட மின்னல் க்ரோனின் மார்பில் நேரடியாகத் தாக்கியது.

 அசாதாரண திறன்

ஆனால் அதிசயமாக அவர் அதில் உயிர் பிழைத்துவிட்டார். இருப்பினும், இவரின் உடலில் சில காயங்கள் ஏற்பட்டன. இந்த மின்னலானது 1,200 மின்னல் ஸ்ட்ரைக்ஸ் கொண்டதாக அறியப்படுகிறது.

மின்னல் தாக்கி உயிர்பிழைத்த பெண்; கிடைத்த மாபெரும் சக்தி - ஆச்சர்ய சம்பவம்! | American Woman Survived Lightning Strike

தொடர்ந்து, 2 ஆண்டுகளுக்குப்பின் அவருக்கு ஒரு அசாதாரண திறன் வந்துள்ளது. அதன் மூலம், புயல்கள் உருவாகும் முன்னரே அதை உணரும் திறன் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், புயல் மேகங்கள் சூழும் போது, க்ரோன் தனது மார்பு பகுதியில் இறுக்கமான உணர்வை பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.