மனித ரத்தத்தை குடிக்கும் வினோத பெண்; தினமும் 1 லிட்டர் அருந்தும் பழக்கம்! காரணம்?
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தினமும் ஒரு லிட்டர் ரத்தம் குடிக்கும் வினோத பழக்கத்தை கொண்டுள்ளார்.
ரத்தம் குடிக்கும் பெண்
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா நகரில் வசிக்கும் மிச்செல் என்ற பெண்(40) ஒருவர் தினமும் ஒரு லிட்டர் ரத்தம் குடிப்பவர் என்று தெரியவந்துள்ளது. இதை பற்றி அப்பெண் 2013ஆம் ஆண்டு வெளிப்படையாக கூறியுள்ளார்.
அதிலும் சில மிருகங்களின் ரத்தத்தைதான் அருந்துவதாக அவர் குறிப்பிட்டார். ரத்தம் குடிப்பது பற்று அவருடன் கேட்டபோது, கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 3,800 லிட்டர் ரத்தத்தை குடித்திருப்பதாகவும், அது வைன் குடிப்பது போன்றே இருக்கும் என்கிறார்.
தினசரி அருந்துவதால் எப்போதும் தெம்பாகவே உணர்வதாக குறிப்பிட்டுள்ளார். அவர் ரத்தத்தை கிளாஸில் ஊற்றி நேரடியாகவும், தனது உணவில் கலந்து கொள்வது உண்டு. காலையில் குடிக்கும் காப்பியுடனும் அவர் ரத்தத்தை கலந்து குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அவர் பெரும்பாலும் மிருகங்களின் ரத்தத்தைதான் அதிகம் குடிப்பவராக இருப்பினும், மனித ரத்தம் மிக ருசியாக இருக்கும் என கூறினார். அப்போது, "மிருகங்களின் ரத்தத்தை விட மனிதர்களின் ரத்தத்தைதான் நான் விரும்புவேன்.
தினமும் 1 லிட்டர்
அமெரிக்காவில் விதிமுறைகள் கடுமையாகவிட்டது. மனித ரத்தம் எளிமையாக கிடைப்பதில்லை, மேலும், அதை குடிப்பதும் சற்று கடினம்தான். ஆனால், நான் ரத்த காட்டேரி இல்லை. எனக்கு ரத்தம் குடிக்க பிடிக்கும் அவ்வளவுதான்" என பேசினார்.
மேலும், இந்த பழக்கம் எப்படி தொடங்கியது என்பதை குறித்து அவர் விளக்கியுள்ளார். அதாவது, மிச்செலின் தனது சிறு வயதில் நடந்த சில பிரச்சனைகள் அவரை வருத்தியுள்ளது இதனால், அவரது 18 வயதில் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தபோது தனது கையை அறுத்துள்ளார்.
அப்போது அவரது கையில் ரத்தம் வடிந்துள்ளது. பெருக்கெடுத்து ஓடி ரத்தத்தை வாயில் வைத்து ருசி பார்க்கையில் அந்த சுவை மிச்செலினிற்கு பிடித்துள்ளது. எனவே அன்றிலிருந்து இந்த பழக்கத்தை தொடங்கியாதாக கூறியுள்ளார்.
அந்த உணர்வை குறித்து அவர் பேசுகையில், ரத்தம் என் தொண்டையில் இறங்கும்போது, சளி பிடித்து சூடான பானத்தை குடிப்பது போன்ற உணர்வு இருக்கும். எனக்கு ரத்தம் கிடைக்கவில்லை என்றால் எரிச்சலும் கோபமும் வருகிறது. எனது வீட்டை விட்டு வெளியே போக மனம் வராது. எனக்கு ரத்தம் எப்போதும் வேண்டும் என தெரிவித்துள்ளார்.