ஆடையின்றி அறைக்குள் பிரபல நிறுவன தலைமை அதிகாரி - அலறிய பெண்!
பிரபல நிறுவன தலைமை அதிகாரி ஆடையின்றி பெண்ணின் அறைக்குள் நுழைந்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் புகார்
அமெரிக்கா, ஃபயெட்வில்லே நகரைச் சேர்ந்தவர் இளம்பெண். அவர் தன் வீட்டில் யாரோ ஒருவர் ஆடையின்றி படுத்திருப்பதாக போலீஸுக்கு தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, போலீஸ் அங்கு வந்து பார்த்ததில், அங்கிருப்பவரின் உடையிலிருந்து ஐடி மூலம் அவர்,
பிரபல இறைச்சி பதப்படுத்தும் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஜான் ஆர்.டைசன் என்பது தெரியவந்தது. பின்னர் அவரை எழுப்பியுள்ளனர். ஆனால், டைசன் போதையில் இருந்ததால் போலீஸின் வார்த்தைகளை அவரால் கேட்க முடியவில்லை.
பிரபலம் கைது
அதனையடுத்து, அவர்மீது போதை மற்றும் குற்றவியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. பின் கைது செய்யப்பட்டு அன்று மாலையே விடுவிக்கப்பட்டார். மேலும், டிச.1 நீதிமன்றத்தில் ஆஜராவார் என கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த நிறுவனம், ``இந்தச் சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரியும். ஆனால், இது அவரின் தனிப்பட்ட விஷயம் என்பதால் நாங்கள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை" என கூறியுள்ளது. டைசன் இந்தச் சம்பவம் குறித்து,
என் தனிப்பட்ட நடத்தைக்காக நான் வெட்கப்படுகிறேன். நான் பெரும் தவறு செய்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.