மூன்று நாட்களாக ஆடையின்றி தவித்த சீரியல் நடிகர் - அலைக்கழித்த போலீசார்
சீரியல் நடிகர் ஆமோத் சக்கரபாணி தன்னுடைய பொருட்கள் திருட்டு போனதாக அளித்த புகாருக்கு வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் அலைக்கழித்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சீரியல் நடிகர் பொருட்கள் திருட்டு
பிரபல சூப்பர் சிங்கர் பாடகியான சோனியாவின் கணவர் ஆமோத் சக்கரபாணி இவர் தனது நண்பரான சின்னத்திரை நடிகர் லோகேஷ் பாஸ்கரனுடன் காரில் கோயம்பேடு சென்றுள்ளனர்.
காரை ஒரு பிரபல பிரியாணி உணவகத்திற்கு முன் நிறுத்திவிட்டு சென்றுள்ளனர். விடுதியில் அறை தேடிவிட்டு வந்த போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
காரில் வைக்கப்பட்டிருந்த ஆமோத் சக்கரபாணியின் பேக் திருடப்பட்டுள்ளது. பேக்கில் ஒன்றரை பவுன் தங்க சங்கிலி, குழந்தையின் தங்க மோதிரம், ரூ.35 ஆயிரம் பணம் மற்றும் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள மூக்கு கண்ணாடி, விலை உயர்ந்த ஆடைகளை திருட்டுப் போனது.
போலீசார் மெத்தனம்
இதையடுத்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் புகாரை அளித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் தன்னை அழைக்கழித்ததாகவும், மூன்று நாட்களாக ஒரே ஆடை அணிந்திருந்ததாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நடமாட்டமும், வாகனங்களின் போக்குவரத்து அதிகம் உள்ள கோயம்பேடு பகுதியில் சீரியல் நடிகரின் பொருட்கள் திருடு போன நிலையில் போலீசார் உரிய விசாரணை நடத்தாமல் அலைக்கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.