எனக்கொரு கணவன் வேண்டும்; நடுரோட்டில் இளம்பெண் செய்த செயலை பாருங்க!
பிரபல மாடல் ஒருவர் தனக்கான கணவனை தேடி சாலையில் நின்ற சம்பவம் வைரலாகி வருகிறது.
கரோலினா கீட்ஸ்
அமெரிக்கா, மன்ஹாட்டன் பகுதியைச் சேர்ந்தவர் கரோலினா கீட்ஸ்(29). இவர் 10க்கும் மேற்பட்ட மாடலிங் இதழ்களின் அட்டை படத்தில் இடம்பெற்றவர். இந்நிலையில், இவர் கடந்த 2 ஆண்டுகளாக தனக்கான துணையை தேடி வருகிறார்.
இதற்காக பல்வேறு டேட்டிங் ஆப்களையும் முயற்சித்துள்ளார். தற்போது, தினமும் தனது ’கைகளில் எனக்கான கணவனை தேடுகிறேன்’ என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தியபடி நகரின் முக்கிய சாலைகளில் நிற்கிறார்.
கணவன் தேவை
அதன்படி, இவரது பாதகையை பார்த்த ஒருவருடன் தன் போன் நம்பரை பரிமாறிக் கொண்ட கரோலினா, எனக்கான துணையை கண்டுபிடித்து விட்டேன் என நினைக்கிறேன். அவருடன் பேசி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், திடீரென அந்த நபர் தனக்கு ஏற்றவர் அல்ல என்பதால், மீண்டும் சாலைக்கு வந்துள்ளார். மேலும், தான் தேடும் ஒரு நல்ல கணவர் தனக்கு கிடைப்பார் என நம்புவதாகவும் அதுவரை தனது முயற்சியை கைவிடப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.