இன்னொரு மனைவி வேணும் - 8 குழந்தைகளுடன் ஜாலியாக பொழுதை கழிக்கும் பிரபலம்!
2 மனைவிகளுடனும், 8 குழந்தைகளுடனும் வாழ்ந்து வருகிறார் கால்பந்து பிரபலம்.
மசாயா லெஜண்ட்
அமெரிக்க கால்பந்து வீரர் மசாயா லெஜண்ட் ஆண்ட்ரூ. இவருக்கு 2 திருஅனமாகி எட்டு குழந்தைகள் உள்ளது. மேலும் ஒரு குழந்தை பிறக்க உள்ளது. இந்நிலையில் மூன்றாவது திருமணம் செய்ய உள்ளதாக அவர் தெரிவித்திருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

2014ஆம் ஆண்டு, இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்ட ஸ்டெப்பனி என்ற பெண்னை திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவருக்கும் கருத்து வேற்பாடு இருந்ததால் பிரிந்து பேசாமல் இருந்தனர். அப்போது ஆண்ட்ரூவுக்கு ரோசா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
2 மனைவிகள்
இதுகுறித்து அவரது முதல் மனைவியிடம் கூறவே, அவரும் சம்மதம் தெரிவிக்க 2019ல் ஸ்டெப்பனி, ஆண்ட்ரூ, ரோசா மூவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இதில் ஆரம்பத்தில் முதல் மனைவிக்கு சிக்கல் இருந்து வந்துள்ள நிலையில், மூவரும் ஒத்துப்போகி வாழ மூன்று ஆண்டு காலம் ஆகியுள்ளது.

இந்த உறவு குறித்து ஸ்டெப்பனி கூறுகையில், "கணவருடன் பெண் ஒருவரும் இருப்பதில் எனக்கு பிரச்சனை இல்லை. குறிப்பாக, காதலியாக எனக்கு தேவைப்படுவதை கொடுக்கும் பெண் இருக்கும்போது எனக்கு கவலை" என்றார்.
8 குழந்தைகள்
தொடர்ந்து ரோசா, "எனக்கு ஆணை விட பெண்தான் அதிக ஈர்க்கிறார்கள். ஆனால், ஆண்ட்ரூ தன்னை எதிர்பால் ஈர்ப்பாளராகவே அடையாளப்படுத்திக்கொள்கிறார்" என்றார். தற்போது, தங்களுக்கு மேலும் ஒரு குழந்தை வர இருப்பதால்,
மற்றொரு பெண்ணையும் எங்களின் குடும்பத்திற்குள் கொண்டுவரலாம் என்ற சிந்தனையில் உள்ளோம்" என்று தெரிவித்தார். மனைவிகள் இருவரும் இருபால் ஈர்ப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.