இந்தியாவிற்கு பெண்கள் தனியாக செல்ல வேண்டாம் - அமெரிக்கா எழுத்தாளர் பரபரப்பு கருத்து
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்ணிற்கு ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது உலக அரங்கில் விமர்சனங்களை பெற்று வருகின்றது.
கொடுமை
ஸ்பெயின் - பிரேசிலைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் ஆசியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 66 நாடுகளை வெற்றிகரமாக கடந்துள்ள இந்திய வந்த அவர்களுக்கு ஜார்கண்ட் மாநிலத்தில் பெரும் கொடுமை நிகழ்ந்துள்ளது.
மர்மநபர்களால் வழிமறிக்கப்பட்டு கணவர் கண் முன்னரே அப்பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. டித்து தொடர்பாக அத்தம்பதிகள் வீடியோ வெளியிட அது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதில், 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டவருக்கு இப்படி அநீதி நிகழ்ந்துள்ளது உலக அளவில் கண்டனங்களை பெற்று வருகின்றது.
தனியாக
இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், ஊடகவியலாளருமான டேவிட் ஜோசப் வோலோட்ஸ்கோ, இந்த சம்பவம் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தியாவில் வாழ்ந்தபோது, நான் கண்ட பாலியல் தொல்லைகள் போல் வேறு எங்கும் கண்டதில்லை.
66 நாடுகளில் நடக்காத சோகம் - கணவர் கண்முன்னே ஸ்பெயின் பெண்ணிற்கு இந்தியாவில் ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை
சில நாட்கள் மட்டுமே அங்கு தங்கியிருந்தாலும், துன்புறுத்தப்படாமலோ அல்லது தாக்கப்படாமலோ அல்லது பாலியல் வன்கொடுமை செய்யப்படாமலோ கூட ஒரு பெண் பயணியை நான் சந்தித்ததில்லை. நான் இந்தியாவை நேசிக்கிறேன். உலகில் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாக இந்தியா எப்போதும் இருக்கும். ஆனால் அங்கு தனியாக பயணம் செய்ய வேண்டாம் என்று பெண் தோழிகளுக்கு அறிவுரை கூறியிருக்கிறேன்.
இந்திய சமூகத்தில் இது ஒரு முக்கியப் பிரச்சனையாகவே இருக்கிறது. இதில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். இவருடைய கருத்துக்கு பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.