எனக்கும் 14 வயசு தான்...பள்ளி மாணவர்களை பாலியல் வலையில் விழ வைத்த இளம்பெண்
அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் தன் வயதை குறைத்து கூறி, பல பள்ளி மாணவர்கள் பாலியல் உறவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் பரபரப்பு
23 வயதான இளம் பெண்ணான அலைசா ஆன் ஜிங்கர் என்ற ஃபுளோரிடா மாகாணத்தை சேர்ந்த இளம் பெண் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். தன்னை 14 வயது பெண் தான் என கூறி, இவர் பள்ளி சிறுவன் ஒருவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
தகவல் அறிந்து வந்த காவல் துறை அதிகாரிகள், ஜிங்கரை கைது செய்துள்ளனர்.
திடுக்கிடும் பின்னணி
கைதான பிறகு தான் ஜிங்கரின் பின்னணி வெளியே வந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில், மாணவர் ஒருவரிடம் இதே போன்று உறவில் ஈடுபட முயன்ற குற்றச்சாட்டில் கைதான ஜிங்கர் 7500 டாலர் ஃபைன் செலுத்தி வெளியில் வந்துள்ளார்.
வெளியே வந்த இவர் சமூகவலைத்தளங்களில் தன்னை பள்ளி மாணவி போல சித்தரித்து வீடியோக்களை வெளியிட்டு குறிப்பிட்ட வயது மாணவர்களை குறிவைத்து அவர்களுடன் பழகி வந்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை இவரால் பாதிக்கப்பட்ட 4 சிறுவர்கள் புகாரளிக்க முன்வரவே ஜிங்கரின் அத்துமீறல் வெளியே வந்துள்ளது.11 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஜிங்கர் மீது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது. ,