ஹோட்டலில் 6 ஆண்களுடன் ரூம் போட்டு தங்கிய பெண்...சந்தேகித்த போலீஸ் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்
தனியார் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி மோசடியில் ஈடுபட்டு வந்த ஒரு பெண், 6 ஆண் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹோட்டலில் ரூம் போட்டு..
இன்றைய நவீன உலகில் மோசடி என்பது சர்வசாதாரணமாக நடந்துள்ளது. ஆனால், இந்த நடவடிக்கைகள் எந்த இடத்தில் இருந்து நடக்கிறது என்பது தெரியாமலே பலரும் ஏமாந்து வருகிறார்கள்.
அப்படி ஒரு விஷயம் தான் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியர் மாதவ் நகரில் உள்ள ஓட்டலில் 6 இளைஞர்களுடன் தனியாக பெண் ஒருவர் தங்கியுள்ளார்.
6 ஆண்களுடன் ஒரு பெண் தனியார் ஹோட்டலில் தங்கியதால் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
விசாரணையில்....
அதாவது, அபய் ரஜாவத், நித்தேஷ் குமார், தீபக் தாபா, பர்வேஸ் ஆலம், ராஜ் கைலாஸ்கர், சுரேஷ் வாசல் என்ற இந்த 6 இளைஞர்கள் ஸ்வேதா பார்தி என்ற பெண்ணுடன் அறை எடுத்து தங்கி கால் சென்டர் நடத்துவது போல மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளை சேர்ந்தவர்களை குறிவைத்து பல நாட்களாக இந்த கும்பல் பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளது. இவர்களை அதிரடியாக கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்து 8 லேப்டாப், 15 செல்போன் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர். நூதன வழியில் மோசடி சம்பவத்தில் கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளது மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.