வரி மட்டும் இல்லையென்றால் அமெரிக்கா முழுசா அழிஞ்சுரும் - கொதித்த டிரம்ப்
வரிவிதிப்பு இல்லாவிட்டால் அமெரிக்கா முழுமையாக அழிந்துவிடும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வரிவிதிப்பு
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார். உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால்,
கூடுதலாக 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார். தொடர்ந்து இந்த வரிவிதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக நியூயார்க்கில் உள்ள வர்த்தக விவகாரங்களுக்கான வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
அதில் டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவுகள் அவரின் அதிகார மீறலாகும். அனைத்து உத்தரவுகளும் நிரந்தரமாக ரத்து செய்வதாக தெரிவித்தனர். இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு மனு தாக்கல் செய்தது.
டிரம்ப் ஆவேசம்
இதனை விசாரித்ததில், அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை. இத்தகைய வரிகளை விதிக்க டிரம்ப்புக்கு எந்த அதிகாரமும் இல்லை. தேசிய அவசர நிலையை அறிவிக்கவோ, அல்லது உலகில் உள்ள அனைத்து நாடுகள் மீதும் வரிகளை விதிக்கவோ டிரம்ப்புக்கு அதிகாரம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வரிவிதிப்பு நடவடிக்கையும், நாம் ஏற்கனவே பெற்ற டிரில்லியன் கணக்கான டாலர்களும் இல்லாவிட்டால், நமது நாடு முழுமையாக அழிந்துவிடும்.
மேலும் நமது ராணுவ சக்தி உடனடியாக அழிக்கப்படும். தீவிர இடதுசாரி நீதிபதிகள் குழுவினர் இதை பொருட்படுத்தவில்லை. ஆனால் அந்த குழுவில் ஒபாமாவால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஒருவர் மட்டும் நமது நாட்டைக் காப்பாற்ற வாக்களித்துள்ளார்.
அவரது துணிச்சலுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர் அமெரிக்காவை நேசிக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.