வரிகளை அள்ளி வீசிய டிரம்ப் - இந்தியா என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
வரி தொடர்பாக இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகளை நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
50 சதவீத வரி
இந்தியா மீது அமெரிக்காவின் 50 சதவீத வரி அமலுக்கு வந்துள்ளது. தொடர்ந்து இந்திய நிதி அமைச்சகம் மாதாந்திர பொருளாதார மதிப்பாய்வை வெளியிட்டது.
அதில், “அமெரிக்கா விதித்துள்ள வரி காரணமாக உடனடியாக எந்தப் பாதிப்பும் இல்லை. நீண்டகால அடிப்படையில்தான் பாதிப்பு ஏற்படும். தற்போது நடைபெற்று வரும் இந்தியா–அமெரிக்கா பேச்சுவார்த்தை மிக முக்கியமானது.
இந்தியா சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தியா நடவடிக்கை
மேலும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நியூசிலாந்து, சிலி, பெரு ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. இந்த ஒப்பந்தங்கள் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தெரிய இன்னும் காலம் ஆகும்.
ஒருவேளை அமெரிக்காவின் 50 சதவீத வரி தொடர்ந்தால், இந்த ஒப்பந்தங்கள் இந்தியா–அமெரிக்கா வர்த்தகத்தை முழுமையாக ஈடுசெய்யாமல் போகும் வாய்ப்பும் உள்ளது," என்று குறிப்பிட்டுள்ளது.