அதிக கடன் உள்ள நாடுகள்; முதலிடத்தில் அமெரிக்கா - இந்தியாவின் நிலை?

United States of America Japan India England
By Sumathi Oct 03, 2024 10:50 AM GMT
Report

அதிக கடன் உள்ள நாடுகளின் பட்டியலில் வெளியாகியுள்ளது.

அதிக கடன் 

பல நாடுகள் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து கடன் வாங்கி தங்கள் பொருளாதாரத்தை நடத்தி வருகின்றன. வேர்ல்டு ஆஃப் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் என்கிற பக்கத்தில் அதிக கடன் உள்ள நாடுகளின் பட்டியல் குறித்த விவரங்கள் பகிரப்பட்டுள்ளது.

america

அதன்படி, அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் $104,936 (தோராயமாக ரூ. 87 லட்சம்) கடன் உள்ளது. மறுபுறம், ஒவ்வொரு வரி செலுத்துபவரும் சுமார் $269,269 (தோராயமாக ரூ. 2.2 கோடி) கடனைச் சுமக்கிறார்கள்.

தூங்கி தூங்கியே ரூ.9 லட்சம் சம்பாதித்த பெண் - எப்படி தெரியுமா?

தூங்கி தூங்கியே ரூ.9 லட்சம் சம்பாதித்த பெண் - எப்படி தெரியுமா?

இந்தியா நிலை?

அந்த வகையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ள நிலையில், சீனா 14,692 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 123 லட்சம் கோடி) கடனுடன் 2வது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் ஜப்பான் 2023ல் ஆண்டுக்கு 10,797 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 90 லட்சம் கோடி) கடனைப் பெற்றுள்ளது.

தொடர்ந்து இங்கிலாந்து 3,469 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 29 லட்சம் கோடி) கடனைப் பெற்றுள்ளது. பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகியவை முறையே 3,354 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 28 லட்சம் கோடி) மற்றும் 3,141 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 26 லட்சம் கோடி) ஆண்டு கடனுடன் 5வது மற்றும் 6வது இடத்தில் உள்ளன.

சுமார் 3,057 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 25 லட்சம் கோடி) கடனுடன் இந்தியா 7வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.