வங்கதேச வன்முறைக்கு நாங்கள்தான் காரணமா?அமெரிக்கா திட்டவட்டம்!

United States of America Bangladesh World
By Swetha Aug 13, 2024 08:30 AM GMT
Report

வங்கதேச வன்முறைக்கு நாங்கள் காரணம் கிடையாது என அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

நாங்கள் காரணமா?

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டு மசோதா திட்டத்திற்கு எதிர்ப்பு தொரிவித்து மாணவ அமைப்பினர் பேராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்களது போராட்டம் வன்முறையாக வெடித்தது. மேலும் போராட்டக்காரர்கள் பிரதமர் ஷேக் ஹசீனாவை ராஜினாமா செய்ய கோரி அவரது குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்தனர்.

வங்கதேச வன்முறைக்கு நாங்கள்தான் காரணமா?அமெரிக்கா திட்டவட்டம்! | America Is Not The Reason For Bangladesh Crisis

இந்த தீவிரத்தை அறிந்த ஷேக் ஹசீனா ராணுவ விமானத்தில் தப்பித்து இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். எனினும் வங்க தேசத்தில் போராட்டம் ஓயவில்லை. இதனிடையே ராணுவ ஆதரவுடன் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு ஆட்சி செய்து வருகிறது.

எனினும் வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. இதற்கிடையே தன்னை ராஜினாமா செய்யவும் வங்க தேசத்தில் வன்முறையை தூண்டவும் முக்கிய காரணமாக அமெரிக்கா இருந்ததாக ஷேக் ஹசீனா தரப்பில் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் வங்கதேசத்து முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை சார்பில் காரின் ஜரின் பியர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, வங்கதேத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை அந்த நாட்டு மக்களின் எதிர்காலத்தை முடிவு செய்ய தொடங்கப்பட்டது.

வங்கதேச கலவரம் ; ஹோட்டலில் 24 பேர் உயிரோடு எரித்து கொலை

வங்கதேச கலவரம் ; ஹோட்டலில் 24 பேர் உயிரோடு எரித்து கொலை

அமெரிக்கா 

அதற்கும், அமெரிக்காவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் கடந்த வாரங்களில் வங்கதேசத்தில் நிலவி வரும் வன்முறைக்கு அமெரிக்கா தான் சதி செய்தது என கூறும் தகவல்கள் முற்றிலும் பொய். உண்மைக்கு மாறானது.

வங்கதேச வன்முறைக்கு நாங்கள்தான் காரணமா?அமெரிக்கா திட்டவட்டம்! | America Is Not The Reason For Bangladesh Crisis

இந்த குற்றச்சாட்டுக்கு வங்கதேசத்து மக்கள் தங்களை ஆட்சி செய்யும் அரசை விரைவாக முடிவு செய்ய வேண்டும். மாணவர்களை பாதிக்கும் வகையில் மசோதா தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது தான் வன்முறைக்கு காரணம் ஆகும். வங்க தேசத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையை அமெரிக்கா தீவிரமாக கண்காணித்து வருகிறது என்றார்.

மேலும் ஷேக் ஹசீனா மகனின் வன்முறை தொடர்பான அமெரிக்கா மீதான குற்றச்சாட்டுகளையும் அமெரிக்கா திட்டவட்டமாக மறுக்கிறது என்று கூறினார். மேலும் வங்க தேசத்தில் நிலவும் வன்முறையை இடைக்கால அரசு கட்டுப்படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டிய பணிகளை மேற்கொள்ள அவர் பரிந்துரைத்தார்.

இதுமட்டுமின்றி வங்கதேசத்து விவகாரத்தில் அமெரிக்கா மீது கூறப்படும் அனைத்தும் குற்றச்சாட்டுகளும் முற்றிலும் தவறானது என இறுதியாக ஒருமுறை கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.