உக்ரைனுக்கு 300 மில்லியன் நிதியுதவி - ரஷ்யாவை சீண்டும் அமெரிக்கா!

United States of America Ukraine Russia
By Vinothini Jun 01, 2023 06:57 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

ரஷ்யா உக்ரைன் போர் நடந்து வரும் நிலையில் அமெரிக்கா உக்ரைனுக்கு தொடர்ந்து உதவி வருகிறது.

போர்

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டிற்கு இடையில் போர் நடந்து வருகிறது. இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது.

america-helps-ukraine-by-providing-money-missiles

இதனால் உக்ரைன் நாடு மிக பெரிய அடிவாங்கியது, மக்கள் மிகவும் பாதிப்படைந்தனர்.

ஆகையால் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் போர் ஆயுதங்கள் வழங்கியும், நிதியுதவி வழங்கியும் வருகின்றனர்.

அமெரிக்கா

இந்நிலையில், உக்ரைனுக்கு புதிதாக சுமார் 300 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.

america-helps-ukraine-by-providing-money-missiles

இதில் ராக்கெட் லாஞ்சர்கள், பீரங்கிக்கான வெடிமருந்துகள் ஆகியவையும் அடக்கம்.

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் இதற்கு ஒப்புதல் அளிக்க முடிவு செய்துள்ளார்.

ரஷியா உக்ரைன் மீது படையெடுக்கத் துவங்கியதில் இருந்து இதுவரை அமெரிக்கா 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பாதுகாப்பு உதவிகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் ரஷ்யா மற்றும் அமெரிக்கா உறவில் பிளவு ஏற்பட்டு வருகிறது.