ஆள் கடத்தல் சர்ச்சை; 303 இந்தியர்கள் சென்ற விமானம் அவசர தரையிறக்கம் - என்ன நடந்தது?
303 இந்தியர்களுடன் சென்ற விமானம் மும்பை வந்து சேர்ந்தது.
ஆள் கடத்தல்?
துபாயில் இருந்து நிகரகுவா(Nicaragua) நாட்டுக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப காரணங்களுக்காக பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள Vatry விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
சுமார் 303 பயணிகள் பயணித்த இந்த விமானத்தில் இந்தியர்கள் தான் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதனால், இந்த விமானம் கடத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
அவசர தரையிறக்கம்
விசாரணையில், அவர்கள் சட்டவிரோதமாக நிகரகுவா நாட்டிற்கு புறப்பட்டது தெரிய வந்தது. லத்தீன் அமெரிக்காவில் உள்ள நிகரகுவாவிற்கு சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்வதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். இதையடுத்து அந்த விமானம் பிரான்ஸில் நிறுத்தப்பட்டது.
விமானத்தில் இருந்தவர்கள் தங்களுக்கு பிரான்ஸில் அகதி அந்தஸ்து கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதன்பின், அவர்களுக்கு அங்கேயே தற்காலிகமாக தங்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. இந்நிலையில், அந்த விமானம் 276 பயணிகளுடன் மும்பை வந்து சேர்ந்திருக்கிறது.
மீதமிருந்த பயணிகள், தங்கள் நாடுகளுக்கு செல்ல விருப்பம் இல்லை என்று கூறிய நிலையில் அங்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளது.