அமெரிக்க கார் குண்டு வெடிப்பு-திட்டமிட்ட சதி காவல்துறை தகவல்

india america blast
By Jon Dec 26, 2020 06:09 PM GMT
Report

நேற்று கிறிஸ்மஸ் தினத்தன்று அமெரிக்காவில் உள்ள நாஷ்வில் நகரத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் குண்டு வெடித்துள்ளது.

இதில் குடியிருப்புகளில் இருந்த ஜன்னல்கள் , கட்டிடங்கள் சேதமடைந்தன. ஆனால், இந்த கார் குண்டு வெடிப்பால் யாரும் ஆபத்தான நிலையில் இல்லை.

ஆனால் அந்த பகுதியினை சேர்ந்த , மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்த தகவலானது,சில நிமிடங்கள் முன்புதான் காவல்துறைக்கு கிடைத்ததாகவும்.

இதனால், அப்பகுதியில் உள்ளவர்களை அவசரமாக வெளியேற்றியதாகவும் அமெரிக்க காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த தகவல் காவல்துறைக்கு எப்படி கிடைத்தது ,என்பதை இன்னும் காவல்துறை கூறவில்லை.ஆனால் இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதுதான் என தெரிவித்துள்ளனர்.