வெள்ளை மாளிகை ஏன் ஆங்கிலேயர்களால் எரிக்கப்பட்டது? உலவும் பேய் - ஒளிந்துள்ள மர்மங்கள்!
வெள்ளை மாளிகையில் மீண்டும் ஆவி பற்றிய செய்திகள் வைரலாகி வருகிறது.
வெள்ளை மாளிகை
அமெரிக்காவின் 47ஆவது அதிபராக, டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே, அவரது பதவியேற்புக்கான செயல்பாடுகள் வெள்ளை மாளிகையில் தீவிரமாக நடந்து வருகிறது.
18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கட்டடத்தில், பேய்கள் காணப்படுவதாகவும், இரவுப்பொழுதில் மர்ம சப்தம் எழுவதாகவும் முன்னதாக செய்திகள் வெளியாகின. குறிப்பாக, 16-வது அதிபர் ஆபிரகாம் லிங்கனின் ஆவி வெள்ளை மாளிகையில் உலவுகிறது என்று பரவலாக நம்பப்படுகிறது.
அதிபர் கால்வின் கூலிட்ஜின் மனைவி கிரேஸ் கூலிட்ஜ், இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் நெதர்லாந்து ராணி வில்ஹெல்மினா ஆகிய பிரபலங்களுக்கு அந்த ஆவி தெரிந்ததாகவும் கூறப்படுகிறது. அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் மகள்களான ஜென்னா புஷ் ஹேகர் மற்றும் அவருடைய சகோதரி பார்பரா என இருவரும் லிங்கன் அறையில் உள்ள குளிர்காயும் இடத்தில் இருந்து பியானோ வாசிக்கும் இசையை 2 முறை கேட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
பரவும் வதந்தி
இந்த மாளிகையில் 28 Fireplaces, எட்டு படிக்கட்டுகள், மூன்று லிஃப்ட்கள், 412 கதவுகள் மற்றும் 147 ஜன்னல்களைக் கொண்டுள்ளது. 140 விருந்தினர்களுக்கு முழு இரவு உணவையும் அல்லது 1,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுக்கு ஹோர்ஸ் டி ஓயூவ்ரெஸ்களையும் வழங்குவதற்கு ஒரு சமையலறையும் உள்ளது.
[2XZ1T[
இதன் கட்டிடம் மற்றும் மைதானம் 18 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்நிலையில், மீண்டும் வெள்ளை மாளிகையில் ஆவி குறித்த செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், 1814ல் ஆங்கிலேயர்கள் வெள்ளை மாளிகையை எரித்தனர், அந்த நேரத்தில் இது எக்ஸிகியூட்டிவ் மேன்ஷன் என்றும் அழைக்கப்பட்டது. பின் 1817ல் போர் முடிந்தவுடன் வெள்ளை மாளிகை மீண்டும் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.