ரியல் 96 ஸ்டோரி; ஆனால் க்ளைமேக் தான் வேற.. 64 வருஷமா தொடரும் வைரல் காதல் கதை!
முதியவர் ஒருவரின் லவ் ஸ்டோரி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
லவ் ஸ்டோரி
அமெரிக்கா, நியூ ஜெர்ஸியைச் சேர்ந்தவர் ஜோசப் போடென்சேனோ(93). இவரது தங்கையின் திருமணம் 1959-ம் ஆண்டு நடைபெற்றது. அதில் மேரி என்பவரை சந்தித்துள்ளார். தொடர்ந்து, இருவருக்கும் காதல் மலர அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர்.
ஆனால் விரைவிலேயே இவர்களுக்கு இடையே பிரிவு ஏற்பட்டது. ஜோசப் ராணுவத்தில் சேர்ந்தார். மேரி, ரேடியோ சிட்டி இசை அரங்கில் நாட்டிய மங்கையாக பணியை தொடங்கினார்.
64 வருடத்திற்குப் பின்..
இதற்கிடையில், மேரி இன்னொருவரை திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளுக்கு தாயானார். ஜோசப்பின் வாழ்க்கையிலும் பல பெண்கள் வந்து சென்றனர். ஆனால் மேரியின் காதலை மறக்க முடியாமல் திருமணம் செய்யாமல் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், மீபத்தில் நடைபெற்ற குடும்ப விருந்தொன்றில் ஜோசப்பும் மேரியும் சந்தித்துக் கொண்டனர். 9 வருடங்களுக்கு முன்பு மேரியின் கணவர் இறந்துள்ளார். மீண்டும் இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. இருவருமே தனியே சந்தித்துக் கொண்டனர். திருமணம் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.
“எனக்கு இதில் எந்த வெட்கமும் இல்லை. மேரியை நான் உண்மையாக காதலித்தேன். அவரும் என்னை மனப்பூர்வமாக காதலிக்கிறார். நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு வேறு என்ன வேண்டும்?” என ஜோசப் கருதுகிறார். இவர்களது திருமணம் அக்டோபர் 15-ம் தேதி நடைபெறவுள்ளது.