வைரலாகும் லவ் ஸ்டோரி அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் காதலுக்கு காரணமான பா.ரஞ்சித்

Ashok Selvan Tamil Cinema Pa. Ranjith
By Karthick Aug 14, 2023 05:43 AM GMT
Report

நடிகர் அசோக் செல்வனும் நடிகை கீர்த்தி பாண்டியனும் விரைவில் திருமண செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ள நிலையில், அவர்களுக்குள் காதல் உருவான கதை குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.  

அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன்

ashok-selvan-keerthi-pandian-love-story

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கிய நபராக இருப்பவர் அசோக் செல்வன். இவருக்கும் நடிகர் அருண் பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனுக்கும் வரும் செப்டம்பர் மாதம் திருமண நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. செப்டம்பர் 13-ஆம் தேதி இவர்களின் திருமண நடைபெறவுள்ளது. இந்நிலையில், இவர்களின் காதல் கதை தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

காரணமான பா.ரஞ்சித் 

 பா ரஞ்சித் படங்களை இயக்குவதை தவிர்த்து படங்களை தயாரித்தும் வருகின்றார். தற்போது அவருடைய நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் ப்ளூ ஸ்டார். இந்த படத்தில் தான் அசோக் செல்வனும் நடிகை கீர்த்தி பாண்டியனும் இணைந்து நடித்து வருகின்றனர்.

ashok-selvan-keerthi-pandian-love-story

இந்த படத்தில் நடிக்கும் போது கிடைத்த அறிமுகம் தான் இருவருக்குள்ளும் காதல் உருவாக காரணமாக உள்ளது என கூறப்படுகிறது. இந்த ப்ளூ ஸ்டார் படத்தில் மற்றொரு நாயகனாக சந்தனுவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.