900 விமானங்கள் திடீர் ரத்து - என்ன காரணம் தெரியுமா?
வானிலை காரணமாக 900 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மோசமான வானிலை
அமெரிக்காவில் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கடும் புயல் வெள்ளம் தாக்கி சமீபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.
தொடர்ந்து பல மாநிலங்களில் பரவலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும்,
ஆறுகள் பெரும் வெள்ளப்பெருக்கு நிலையை எட்டியுள்ளதாகவும், முக்கியமான உள்கட்டமைப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அமெரிக்காவின் தேசிய வானிலை சேவை எச்சரித்துள்ளது. மேலும் புயலால் அங்கு கனமழை பெய்யும் எனவும் அலெர்ட் செய்யப்பட்டுள்ளது.
விமானங்கள் ரத்து
அதன்படி, கென்டகி, டல்லாஸ் உள்ளிட்ட பல மாகாணங்களை புயல் கடுமையாக தாக்கியுள்ளது. இதனால் அங்கு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக ஏராளமான கார்கள் அடித்துச் செல்லப்பட்டன.
மேலும் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்தபோது மணிக்கு சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
எனவே, மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக பயணிகளின் பாதுகாப்பு கருதி சுமார் 900 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளது.