ஒரு வழியாக திருமணத்தை அறிவித்த அமீர் - பாவனி; குவியும் வாழ்த்துகள்!
அமீர்- பாவனியின் திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அமீர்- பாவனி
பாவனி ஹைதராபாத்தை சேர்ந்தவர். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அந்த கணவர் குறுகிய காலத்திலேயே தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார்.
பின்னர் தனியாக இருந்த பாவனிக்கு சின்னத்தம்பி என்னும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியல் மூலமாக அவர் மிகப் பிரபலமானார். தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நிலையில் சக போட்டியாளர் அமீர் பாவனியிடம் தனது காதலைக் கூறினார்.
திருமணம்
ஆனால், பாவனி அதுகுறித்து எந்தவித தகவலும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். அதன்பின், “பிபி ஜோடிகள்” சீசன் 2 நிகழ்ச்சியில் இருவரும் நடன ஜோடியாக பங்கேற்று அதில் டைட்டிலை தட்டிச் சென்றனர். தொடர்ந்து அமீரின் காதலையும் ஏற்றார் பாவனி.
மேலும், இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பங்கேற்ற அமீர் பாவனி ‘இந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடக்கும் எனக் கூறியுள்ளனர். ‘