எங்க லவ் விஷயம் தெரிஞ்சதும் அஜித் இததான் சொன்னாரு - சுவாரஸ்யம் பகிர்ந்த அமீர், பாவனி
தங்களது காதல் குறித்து தெரிந்ததும் அஜித் கூறிய தகவல்களை அமீரும் பாவனியும் மனம் திறந்துள்ளனர்.
அமீர் - பாவனி
நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள துணிவு திரைப்படத்தில், பிக்பாஸ் பிரபலங்களான அமீரும், பாவனியும் நடித்துள்ளனர். இந்நிலையில், அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து இருவரும் பேசியுள்ளனர். அதில், துணிவு படத்தில் நடிக்க தங்களுக்கு அழைப்பு வந்த போது யாரோ கலாய்ப்பதற்காகதான் இப்படி சொல்கிறார்கள் என்று நினைத்தோம்.
பின்னர் அது உண்மை என்று தெரிந்ததும் அவர்களால் நம்பவே முடியவில்லை. முதல் ஷூட்டிங் சென்றபோது இருவருக்கும் ரொம்பவே பதற்றமாக இருந்தது. அமீர் அஜித் அருகிலேயே அமர வேண்டு என்பதால் அசையவே மாட்டார். அஜித் பக்கத்தில் அமர்ந்திருக்கிறோம் என்பதை கூட அமீரால் நம்ப முடியவில்லை.
சுவாரஸ்ய தகவல்
அஜித் ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரிடமும் அவ்வளவு அன்பாக நடந்து கொள்வார். தான் வரும்போது யாரும் எழுந்திரிக்க கூடாது என ஆர்டர் போட்டிருந்தார். மீறி யாராவது எழுந்து நின்றால் ஃபெவிக்கால் போட்டு ஒட்டிவிடுவேன் என்பார். அஜித்துடன் பழகிய பிறகு பதட்டமே இல்லாமல் போய்விட்டது.
தங்களின் காதல் விஷயம் தெரிந்ததும், அஜித் தங்களை அழைத்து வாழ்கையில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது, எப்படி வாழ்க்கையை கொண்டு போக வேண்டும் என இருவருக்கும் அறிவுரை கூறினார். துணிவு படத்தில் நடித்த அந்த 15 நாட்களும் வாழ்க்கையில் மிகவும் அற்புதமான நாட்கள் என்றும் கூறியுள்ளனர்.
தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்தாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62வது படத்தில் நடிக்க உள்ளார். அதற்கு அமீர்தான் கோரியோகிராஃப் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.