அப்பாவுடன் பள்ளிக்கு பைக்கில்... லாரி மோதி உடல் நசுங்கி உயிரிழந்த சகோதரிகள்!

Tamil nadu Accident
By Sumathi Sep 15, 2022 12:26 PM GMT
Report

 தந்தையுடன் பைக்கில் பள்ளிக்குச் சென்ற 2 மாணவிகள், லாரி மோதியதில் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சகோதரிகள்

திருப்பத்தூர், ஆம்பூர் வீராங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவருக்கு 17 வயதில் ஜெயஸ்ரீ, 11 வயதில் வர்ஷாஸ்ரீ என்ற 2 மகள்கள் இருந்தனர். இருவரும் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளனர்.

அப்பாவுடன் பள்ளிக்கு பைக்கில்... லாரி மோதி உடல் நசுங்கி உயிரிழந்த சகோதரிகள்! | Ambur Sisters Died By A Container Truck

தினமும் காலையில் மகள்கள் இருவரையும் பைக்கில் அழைத்துச்சென்று பள்ளியில் விட்டுவிட்டு மாலை நேரத்தில் மீண்டும் வீட்டுக்கு அழைத்துவருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் தண்டபாணி. இன்று காலை வழக்கம்போல,

 லாரி மோதி பலி

பள்ளிக்கு மகள்களை பைக்கில் அழைத்துச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கர்நாடக மாநிலத்திலிருந்து வேலூர் நோக்கி பின்னால் வேகமாக வந்துகொண்டிருந்த கன்டெய்னர் லாரி ஒன்று, தண்டபாணி சென்ற பைக்மீது மோதியது.

அந்த லாரி, தேசிய நெடுஞ்சாலை தடுப்புகளையும் உடைத்துக்கொண்டு சர்வீஸ் சாலையில் இறங்கியது. லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த கோர விபத்தில், தண்டபாணியின் இரு மகள்களும் உடல்நசுங்கி துடிதுடித்து இறந்தனர்.

தண்டபாணியும் படுகாயமடைந்தார். பொதுமக்களால் மீட்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். விபத்து தொடர்பாக, ஆம்பூர் நகர போலீஸார் வழக்கு பதிவுசெய்து ஓட்டுநரை தேடி வருகிறார்கள்.