மாசம் 5.6 லட்சம்...அடுத்த 25 வருசத்துக்கு..!! ஒரே நாளில் ஜாக்பாட் அடித்த ஆம்பூர்க்காரர்!!
இனி மாதமாதம் மாதம் சேலம் ஆம்பூரை சேர்ந்த மகேஷ் குமார் நடராஜனுக்கு 5.6 லட்சம் கிடைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மகேஷ் குமார் நடராஜன்
சேலம் ஆம்பூரை சேர்ந்த மகேஷ் குமார் நடராஜன், Project Manager'ஆக பணியாற்றி வருகிறார். 49 வயதாகும் இவருக்கு எமிரேட்ஸ் டிரா(Emirates Draw)-வின் FAST5 கிராண்ட் பரிசை விழுந்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் அவர் அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதத்திற்கு 25,000 (Emirati Dirham) அதாவது இந்திய பண மதிப்பளவில் 5.6 லட்சம் ரூபாய் கிடைக்கவுள்ளது.
UAE க்கு வெளியே இந்த ஜாக்பாட் அடித்த முதல் வெற்றியாளர் இவராவார். இது குறித்து மகேஷ் குமார் நடராஜன் பேசும் போது, எனது வாழ்க்கையிலும் படிக்கும் காலத்திலும் நான் நிறைய சவால்களை எதிர்கொண்டேன். எனது கல்வியை முடிக்க சமூகத்தைச் சேர்ந்த பலர் எனக்கு உதவினார்கள். சமுதாயத்திற்கு நான் திரும்பக் கொடுக்க வேண்டிய நேரம் இது. சமுதாயத்திற்கான எனது பங்களிப்பு தேவைப்படும் மக்களை சென்றடைவதை உறுதி செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.
மறக்கமுடியாத நாள்
மேலும், இது ஒரு நம்பமுடியாத தருணம், இது என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான மற்றும் மறக்கமுடியாத நாட்களில் ஒன்றாக மாறியது குறிப்பிட்டு, எனது மகள்களின் கல்வியில் முதலீடு செய்யவும், எனது குடும்பத்திற்கு பிரகாசமான எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் திட்டமிட்டுள்ளேன என்று கூறினார்.
2019 முதல் இந்த ஆண்டின் தொடக்கம் வரை சவுதி அரேபியாவில் அவரது நான்கு ஆண்டுகள் சவுதியில் பணியாற்றியுள்ளார். வேலை நிமித்தமாக துபாய் வழியாக அவர் மேற்கொண்ட பயணங்கள் இவருக்கு பிரபலமான பல மணி டிராக்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இது அவரது ஆர்வத்தைத் தூண்ட, தற்போது இந்த ஜாக்பாட் அவருக்கு அடித்துள்ளது.