அரசு அதிகாரி வேடமிட்டு ஏமாற்று வேலை!! அதிரடியாக கடத்தப்பட்ட விசிக பெண் நிர்வாகி!!
சேலத்தில் அரசு அதிகாரி போல நடித்து கடன் வாங்கி தருவதாக ஏமாற்றிய பெண் விசிக அதிகாரி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
விசிக துணை செயலாளர்
சேலம் மாவட்டத்தின் பச்சப்பட்டியை சேர்ந்த காயத்ரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாவட்ட துணைச் செயலாளராக பொறுப்பில் இருந்து வருகின்றார். கட்சியில் இருப்பதால் லோக்கல் ஏரியாவில் பிரபலமாக இருந்த இவர், அப்பகுதியிலுள்ள பெண்களிடம் கடன் வாங்கிதருவதாக மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் வரத்துவங்கியுள்ளன.
[7G4NQB
தனது பகுதியில் இருந்த பெண்களை ஒன்றிணைத்து மகளிர் சுய உதவிக் குழு ஒன்றை அமைத்து தேசிய வங்கிகள் மற்றும் தாட்கோ நிறுவனங்கள் மூலம் பல கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாக காயத்ரி கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
பணம் வாங்கி தருவதாக மோசடி
மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு தாட்கோ நிறுவனம் மூலம் 50 லட்சம் ரூபாய் வரை கடன் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறிய காயத்ரி, அக்கடனில் 50 சதவீதம் அரசு மானியம் கிடைக்கும் என்றும் பச்சப்பட்டி பகுதி பெண்களிடம் 20 ஆயிரம் ரூபாயில் துவங்கி கிட்டத்தட்ட சுமார் 5 லட்சம் ரூபாய் வரையில் பணம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.
பணம் வாங்கியது மட்டுமின்றி, காயத்ரி தன்னை சமூக நலத்துறை அதிகாரி என்று மக்களிடம் கூறி, அரசின் நலத்திட்டங்கள் பெற்றுத் தருகிறேன் என்றும் ஏமாற்றி வந்ததாக புகார் அடுத்தடுத்து வந்துள்ளன. தான் பணிபுரியும் சமூக நலத்துறையில் மற்றவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாகவும் அப்பகுதியில் பலரிடம் மோசடி செய்திருக்கிறார்.
சென்னையில் கைது
காயத்ரியால் ஏமாற்றப்பட்ட பெண்கள் ஒன்று கூடி, சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் விசாரணையை துவங்கிய காவல் ஆய்வாளர் விஜயகுமாரி இந்த புகார்களில் நடவடிக்கை எடுக்க சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தன் மீது தொடர் புகார்கள் எழுந்த நிலையில், காயத்ரி தலைமறைவாக அவருக்கு இந்த மோசடிகளில் துணையாக இருந்த அவரது கார் ஓட்டுநர் லெனின் மற்றும் உதவியாளர் இளமாறன், தோழி சாவித்திரி ஆகியோர் கடந்த மாதமே கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
காயத்ரியை கைது செய்ய தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்து வந்த காவல் துறையினர் அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகம் அமைத்துள்ள சென்னை அசோக் நகர் பகுதியில் காயத்ரி பதுங்கி இருப்பதை கண்டறிந்து அவரை கைது செய்துள்ளனர். அவரை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார், பெண்கள் சிறையில் அடைத்தனர்.